அம்மாடியோ இவ்வளவா?…. 21,000 ரூபாய் வரை உயர்ந்த விமான கட்டணம்…. பயணிகள் அதிர்ச்சி….!!!!

அக்டோபர் மாதத்தில் துர்கா பூஜை, ஆயுத பூஜை,நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை என அடுத்தடுத்து தொடர்ச்சியாக பண்டிகைகள் வருவதால் விமானத்தில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. எனவே பயணிகள் வருகையால் பாட்னா, மும்பை, ஜெய்ப்பூர், அகமதாபாத், வாரணாசி, ஹைதராபாத் உள்ளிட்ட தடங்களில் கட்டணம் வெகுவாக உயர்ந்துள்ளது.

அதாவது ஐந்தாயிரம் ரூபாய் வரை விற்கும் டெல்லி மற்றும் பாட்னா விமான டிக்கெட் தீபாவளியை முன்னிட்டு 8000 ரூபாயிலிருந்து 13,000 ரூபாயாக உயரும் என கூறப்படுகிறது .மேலும் பெங்களூரு மற்றும் தர்பங்கா விமான கட்டணம் 21,000 என்றும் மும்பை மற்றும் தர்பங்கா விமான கட்டணம் 21,000 உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.பண்டிகை நேரத்தில் விமான கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் விமான பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.