இந்தியாவில் தொழிலாளர்களின் நலனுக்காக மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படி தொழிலாளர்களுக்காக e-shram என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக சுமார் 30 கோடி அமைப்பு சாரா தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். இந்த திட்டத்தில் இணைய அமைப்பு சாரா தொழிலாளர் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்பவர்களுக்கு e-shram அட்டை வழங்கப்படும். இந்த அட்டையின் மூலம் பண உதவி உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை பெறலாம். இதற்கு பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி என்பது பெயர்.

இதில் சேரும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் 3000 ரூபாய் ஊதியம் ஆயுள் காப்பீடு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி உதவியும் வழங்கப்படும். இதில் தொழிலாளர்களின் வயது 18 முதல் 59 வயதுக்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் eshram கார்டு பெறுவதற்கு ஆதார் அட்டை மற்றும் மொபைல் எண் அவசியம். இந்த அட்டையை இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்யலாம்.