உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சகோதரர் டாக்டர். தியாகராஜன் இன்று அதிகாலை காலமானார். தியாகராஜனின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4:30 மணி அளவில் விழுப்புரத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திமுகவினர், அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இறுதிச் சடங்கு நிகழ்வுக்கு CM ஸ்டாலின் நேரில் சென்று பொன்முடிக்கு ஆறுதல் கூறுவார் என்று சொல்லப்படுகிறது.