
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடவில்லை என்று அறிவித்துவிட்டது. இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகனிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் திமுக பலமாக இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் கண்டிப்பாக திமுக வெற்றி பெறும் என்று தெரிந்ததால் தான் மற்ற கட்சிகள் போட்டியிடவில்லை என்று கூறினார். இந்நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தற்போது அமைச்சர் துரைமுருகனை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, அரசியலில் ஒரு வயது வந்தவுடன் ஓய்வழிக்க வேண்டும் என்பது ஒரு கிளாசிக் உதாரணம் துரைமுருகன். அவர் ஓய்வு வயதை எட்டி விட்டார் என்று நான் நினைக்கிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சில தலைவர்களுக்கு ஓய்வு கொடுத்துவிடலாம் என்று மேடையிலையை கூறியுள்ளார். அதன் பிறகு பெரியாருக்கும் நிகழ்கால தமிழ்நாட்டிற்கும் தொடர்பு கிடையாது. எப்போது கட்டமைத்த பிம்பத்தை வைத்து அரசியல் செய்ய பார்க்கிறார்கள் என்று கூறினார்.
முன்னதாக பள்ளியில் புதிதாக மாணவர்கள் வரும்போது ஏற்கனவே இருக்கும் பழைய மாணவர்கள் வகுப்பறையை விட்டு செல்ல மாட்டேன் என்று கூறுவது சரியல்ல என்று அமைச்சர் துரைமுருகன் (வயது 86) ஓய்வு பெற வேண்டும் என்பதை மறைமுகமாக நடிகர் ரஜினிகாந்த் சொன்னதாக சர்ச்சைகள் எழுந்தது. நடிகர் ரஜினிகாந்தின் கருத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் கூட வரவேற்பு கொடுத்து இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறினார். இந்நிலையில் தற்போது பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையும் துரைமுருகனுக்கு வயதாகிவிட்டது. மேலும் அவர் ஓய்வு பெற வேண்டும் என்று கூறியுள்ளது பேசும் பொருளாக மாறி உள்ளது.