அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு: தொடரும் பதற்றம்….. காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு…!!!

திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை ஈடுபட்டுள்ளனர். கரூரில் தொடங்கி ஐதராபாத், கேரளா, பெங்களூரு என செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பெரும்பாலான இடங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் மூலம் பலகோடி ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்கின்றனர்.

இதற்கு அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சோதனை நடக்கும் இடங்களில் அமைச்சரின் ஆதரவாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் அந்த பகுதிகளில் போலீஸார்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

Leave a Reply