அமேசான் பிரைமில் வெளியாகும் ‘சாணிக் காயிதம்’… வெளியான தகவல்!!

இயக்குனர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் சாணிக் காயிதம் திரைப்படம், பிப்ரவரி மாதம் அமேசான் பிரைமில் வெளியாவதாக சொல்லப்படுகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் திரைப்படம் சாணிக் காயிதம். இந்தப்படத்தில் கீர்த்தி சுரேஷ் செல்வராகவனுடன் இணைந்து நடித்துள்ளார். படத்திற்காக செல்வராகவன் தன்னுடைய உடலை குறைத்துள்ளார்.

சாணிக் காயிதம் திரைப்படம் ராமேஸ்வரத்தில் படமாக்கப்பட்டு உள்ளது. 80-களின் கால கட்டத்தின் பின்னணியில் நடக்கும் க்ரைம் த்ரில்லராக இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். மேலும் சில்லுக்கருப்பட்டி புகழ் யாமினி யங்னமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம், பிப்ரவரி மாதம் அமேசான் பிரைமில் வெளியாகிறது.