“அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் எஸ்டேட்டில்”….. முன்னறிவிப்பு இல்லாமல் எப் பி ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை….!!!!!!!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டெனால்ட் ட்ரம்பின் மர்-எ-லாகோ என்னும் எஸ்டேட் ஃப்ளோரிடா மாகாணத்தில் அமைந்திருக்கின்றது. இந்த நிலையில் இந்த எஸ்டேட்டில் எப்பிஐ அதிகாரிகள் முன்னறிவிப்பு இல்லாமல் வந்து அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். இதனை டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளார். இது பற்றி அவரது அறிக்கையில் ப்ளோரிடாவில் உள்ள தனது எஸ்டேட்டில் திடீரென வந்த எப்பிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எனது வீட்டில் முன்னறிவிப்பு இல்லாமல் சோதனை நடத்திவரும் தொடர்புடைய அரசமைப்புகளுடன் இணைந்து அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றேன்.

மேலும் இந்த சோதனை அவசியமற்றது முறையற்றதும் கூட என கூறியுள்ளார். இந்த சோதனையின் ஒரு பகுதியாக எப்பிஐ ஏஜெண்டுகள் கட்டாயப்படுத்தி பணப்பெட்டி ஒன்றையும் திறக்க செய்துள்ளனர் என அவர் அதில் தெரிவித்திருக்கிறார். சமீப காலங்களாக மற்றொரு முறை அதிபராவது பற்றி ட்ரம்ப்  சில யுகங்களை வெளியிட்டு வருகின்றார். அதாவது அமெரிக்க நிதி துறையோ டிரம்பின் அதிபர் பதவிக்காலம் நிறைவடைந்த பின் அவர் சில முக்கிய ஆவணங்களை இந்த எஸ்டேட்டுக்கு எடுத்து சென்று விட்டார் என குற்றச்சாட்டுகளின் பெயரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றது என கூறியுள்ளது.

மேலும் வெள்ளை மாளிகையில் இருந்து ப்ளோரிடாவில் உள்ள தனது ஆடம்பர இல்லத்திற்கு சில ஆவணங்கள் அடங்கிய பெட்டிகளை தன்னுடன் ட்ரம் கொண்டு சென்றவற்றை பற்றி இந்த சோதனை நடைபெற்ற கூடும் எனக் கூறப்படுகின்றது. இது தவிர அமெரிக்காவின் கேப்பிடல் கட்டிடத்தில் நடைபெற்ற முற்றுகை போராட்டம் பற்றிய விசாரணையும் தனியாக நடைபெறும் என கூறப்படுகின்றது. இது பற்றி தகவல்கள் எதனையும் எப்பிஐ அமைப்பு வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *