அமெரிக்க முன்னாள் அதிபருக்கு “கொரோனா தொற்று உறுதி”… வெளியான தகவல்…!!!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபராக கடந்த 1993-ஆம் வருடம் முதல் 2001-ஆம் வருடம் வரை பதவி வகித்த பில் கிளின்டனுக்கு தற்போது கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது நான் நன்றாக இருக்கிறேன். மேலும் பூஸ்டர் டோஸ் மற்றும் கொரோனா தடுப்பூசி மற்றும் போட்டிருப்பதால்  எனக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். அதிலும் குறிப்பாக குளிர் காலம் தொடங்க இருப்பதால் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என அவர் பதிவிட்டுள்ளார்.