அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்பை கைதுசெய்ய ஈரான் பிடிவாரண்டு ..!!

ஈரான் அரசு,ராணுவ தளபதி கொல்லப்பட்ட சம்பவத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கைது செய்ய பிடிவாரண்டு உத்தரவு போட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி  அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய ஏவுகணை தாக்குதலில்  ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கொல்லப்பட்டார்.ஜனாதிபதி டிரம்பின் அறிவுறுத்தளுக்கு பிறகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் வலுவானது.

ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டத்தின் காரணமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட  30க்கும் மேலானோர் மீது ஈரான் அரசு கொலை மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது. மேலும் இந்த வழக்கில் டிரம்பை  கைது செய்வதற்கு உதவுமாறு “இன்டர்போல்” என அழைக்கப்படும் சர்வதேச குற்றவியல் போலீஸ் அமைப்புக்கு கோரிக்கை வைத்து,பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது ஈரான் அரசு .

அதுமட்டும் இன்றி, டிரம்ப் உள்ளிட்டோர் தப்பித்து செல்லாமல் இருக்க, ரெட் கார்டு நோட்டீஸ் உத்தரவை ஏற்படுத்த  வேண்டும் என ஈரான் அரசு இன்டர்போலிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இதனையடுத்து  ஈரான் அரசின் கோரிக்கைகளுக்கு இன்டர்போல் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கபடவில்லை. அமெரிக்காவில்  ஜனாதிபதித் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் டிரம்புக்கு எதிராக ஈரான் அரசு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *