அமெரிக்கா இஸ்ரேல் தேசிய கொடிகள் தீவைப்பு…. எதிர்ப்பை வெளிப்படுத்திய போராட்டக்காரர்கள்….!!!!!!!!

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக ஜோபைடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். நான்கு நாள் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஜோபைடன் முதல் நாடாக இஸ்ரேல் சென்றுள்ளார். அதனை தொடர்ந்து சவுதி அரேபியாவிற்கு பயணம் மேற்கொண்ட ஜோபைடன் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பேசி உள்ளார். ஜோ பைடனின் இந்த பயணம் ஈரானை மறைமுகமாக எச்சரிக்கும் விதமாக அமைந்திருக்கிறது. ஜோ பைடனின் இந்த பயணத்தின் போது தங்கள் வான் பரப்பை   இஸ்ரேல் பயன்படுத்த சவுதி அரேபியா அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் இது இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ஜோபைடனின்  மத்திய கிழக்கு நாடுகளில் பயணத்திற்கு ஈரான் கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கின்றது. அதன் ஒரு பகுதியாக ஈரான் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக கண்டன போராட்டம் நடைபெற்று வருகின்றது. அமெரிக்காவிற்கு மரணம், இஸ்ரேலுக்கு மரணம் என்ற கோஷங்களுடன் திரண்ட போராட்டக்காரர்கள் இரு நாடுகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். மேலும் போராட்டக்காரர்கள் அமெரிக்கா இஸ்ரேலின் தேசிய கொடிகளையும் தீ வைத்து எரித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *