அமெரிக்காவை புரட்டிப் போடும் கொரோனா… ஒரே நாளில் 63,000 பேருக்கு தொற்று…!!

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சீனாவில் உள்ள வுகான் நகரில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகளுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,95,24,000 ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக அமெரிக்காவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 63 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. உலகம் முழுவதும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 62 லட்சத்து 67 ஆயிரத்து 252 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 65,098 பேரின் நிலைமை மிக மோசமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,20,00,000 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், கொரோனாவால் 7 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *