அமெரிக்க நாட்டில் கடந்த 1990 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. அதாவது நாட்டையே உலுக்கிய கோமாளி சீரியல் கில்லர் தற்போது சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தற்போது 61 வயதாகும் நிலையில் சிறையிலிருந்து ரிலீசானார். இது ஃப்ளோரிடா கில்லர் கிளவுன் கொலை என்று கூறப்படுகிறது. தமிழில் கோமாளி என்று அர்த்தம். அதாவது மைக்கேல் வாரன் என்பவருடைய மனைவி மார்லன் வாரன். இவரை கோமாளி வேடமடைந்த ஒரு பெண் கொலை செய்தார்.

அதாவது அந்த பெண்ணின் கைகளில் பலூனை கொடுத்துவிட்டு அடுத்த சில நிமிடத்தில் முகத்தில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். இந்த கொலை வழக்கில் எந்த ஒரு துப்பும் கிடைக்காமல் இருந்த நிலையில் பின்னர் மைக்கேல் ஷீலா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். 1990களில் டிஎன்ஏ டெக்னாலஜி இல்லாத நிலையில் இது கடந்த 2017 FBI-க்கு உதவியது.

அதாவது அவர் கோமாளி உடைகள் மற்றும் பலுன்களை வாங்கியது போன்ற ஆதாரங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு அவரை கைது செய்த நிலையில் 7 வருடங்கள் சிறையில் இருந்த நிலையில் அவருக்கு மரண தண்டனை வழங்க கோர்ட் முடிவு செய்த நிலையில் பின்னர் தான் செய்த குற்றத்தை தாமாக முன்வந்து ஒப்புக்கொண்டார். கடந்த இரு வருடங்களுக்கு முன்பாக தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் 12 ஆண்டுகள் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால் நன்னடத்தை காரணமாக ஏழு வருடங்களில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் இதேபோன்று கடந்த 1970களில் 33 ஆண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவர் ஜான் வெயின் கேசி. இவர் கோமாளி வேடம் அணிந்து கொலை செய்த நிலையில் இவர் அமெரிக்காவின் சீரியல் கில்லர் என்று கூறப்படுகிறார். மேலும் இதே பாணியில் ஷீலா ஃப்ளோரிடாவின் கோமாளி கில்லர் என்று கூறப்படுகிறார். அதாவது மார்லன் மீதான காதல் காரணமாக அவருடைய முதல் மனைவியை கொலை செய்துவிட்டு அவரை இரண்டாவது அவ திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.