அமெரிக்காவில் 7 வயது சிறுவன் மீது குற்றசாட்டு ..வெளியான அதிர்ச்சி தகவல் ..!!

அமெரிக்காவில் 7 வயது சிறுவன் மீது வன்புணர்வு குற்றம் சாட்டப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் 7 வயது சிறுவன் மீது வன்புணர்வு குற்றசாட்டை  போலீசார் பதிவு செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் சிறுவன் என்பதால் அவன் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் குறித்த செய்திகளை போலீசார்  வெளியிடவில்லை. இதனையடுத்து குயின்ஸ் பகுதியை சேர்ந்த சட்டத்தரணியான அந்தோணி மர்டோன் சிறுவன் மீது குற்றச்சாட்டு வைத்ததற்காக அதிகாரிகளை வன்மையாக கண்டித்துள்ளார்.

மேலும்  சிறுவனுக்கு தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாது என்றும் இவ்வாறு அந்த ஏழு வயது குழந்தை மீது வன்புணர்வு குற்றம் சாட்டியது தவறு என்றும்  கூறியுள்ளார்.