அமெரிக்காவில் ஜெட் வேகத்தில் பரவுகிறது…. பலி எண்ணிக்கை 12 மில்லியன்…. வெளியே வரவேண்டாம்…. அறிவுறுத்திய அதிகாரிகள் …!!

கொரோனா தொற்றானது அமெரிக்காவில் ஜெட் வேகத்தில் பரவுவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் கதி கலங்கி போயுள்ளது. மேலும் உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளில்  அமெரிக்காதான் முதலில் இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரசின் 2-வது அலை தீவிரமாக வீசி வருகிறது. அங்கு கடந்த சில தினங்களாக காட்டுத்தீயாக  கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 1 லட்சத்து 89 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தால் இன்னும் ஓரிரு தினங்களில் அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை எட்டும் என்று கூறப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் மொத்த எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு 1 கோடியே 22 லட்சத்தை கடந்துள்ளது. அதேபோல் அங்கு  2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமாக மக்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் அடுத்த சில வாரங்களுக்கு மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு  சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *