அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவருக்கு ஏற்பட்ட பக்க விளைவு ..எந்த தடுப்பூசி நிறுவனம் தெரியுமா ?

கொரோனா தொற்றுக்கான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியை  போட்டுக் கொண்ட அமெரிக்கர் ஒருவருக்கு அதிபயங்கர பக்க விளைவு ஏற்பட்டுள்ளது .

அமெரிக்காவின் விர்ஜினியாவை சேர்ந்த 74 வயதான ரிச்சர்ட் என்பவர் கொரோனா தொற்றுக்கான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியை இம்மாதம் மார்ச் 6ஆம் தேதி செலுத்திக் கொண்டுள்ளார் .தடுப்பூசி போட்டுக் கொண்ட நான்கு நாட்களில் அவர் உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு சிவப்பு நிற பெரும் புள்ளிகள்கள் தோன்றியுள்ளது .உடம்பு முழுவதும் சிவப்பு நிறமாக மாறி வெடிப்பு ஏற்பட்டு பிறகு தோலுரிந்து உள்ளது.

இதனால் ரிச்சர்ட் மார்ச் 19ஆம் தேதி தோல் நோய் நிபுணரிடம் சிகிச்சைக்காக  சென்றுள்ளார். பிறகு அவரை சிகிச்சை செய்த மருத்துவர்கள் அவரின் இந்த நிலைமைக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி தான் என்று கூறியுள்ளார் .பின் அவர் 5 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பிறகு வீடு திரும்பியுள்ளார்.