தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு பாஜக  தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழகத்தில் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், திரை பிரபலங்களை அமித் ஷா சந்திக்கிறார். வேலூரில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்கிறார். இதனிடையே, சென்னையில் அமித் ஷா வருகையின் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதை கண்டித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, “அமைச்சர் அமித்ஷா வருகையின் போது மின்தடை ஏற்பட்டது குறித்து தமிழக அரசை குற்றம் சுமத்த முடியாது. இந்த விவகாரத்தில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.