தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு பாஜக  தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழகத்தில் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், திரை பிரபலங்களை அமித் ஷா சந்திக்கிறார்.  அதன்படி தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை 24 பிரபலங்கள் சந்திக்க உள்ள பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில், நல்லி குப்புசாமி, ஏ.சி.சண்முகம், இந்தியா சிமெண்ட்ஸ் என்.சீனிவாசன் உள்ளிட்ட பல தொழிலதிபர்கள் உள்ளனர். சினிமா துறையிலிருந்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், ஆர்கே செல்வமணி, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குனர் ஏஆர் ராஜசேகரன், தயாரிப்பாளர் அபிராமி ராமநாதனும் சந்திக்க உள்ளனர்.