அமலாபால் வீட்டில் விசேஷம்… திருமண ஏற்பாடுகள் தீவிரம்…!!

பிரபல நடிகையான அமலாபால் தனது தம்பியின் திருமண ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

தமிழில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான மைனா படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலாபால். இதனை அடுத்து விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த பிரபலமான இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். அமலாபாலும் பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய்யும் கடந்த 2014ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். இதனை தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் அமலா பால். இந்நிலையில் நடிகை அமலாபாலின் தம்பி அபிஜித்ற்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. இதனால் நடிகை அமலாபால் தனது தம்பியின் திருமண வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறாராம். அண்மையில் நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்கள் நடிகை அமலாபால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *