“அமலாபாலின் அதோ அந்த பறவை போல”…. படத்தின் புதிய அப்டேட்….!!!!!!!!!

செஞ்சுரி இன்டர்நேஷனல் ஃபிலிம் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கே ஆர் வினோத் இயக்கத்தில் அதோ  அந்த பறவை போல திரைப்படம் உருவாகியிருக்கிறது. அமலா பால் கதாநாயகி நடித்து இருக்கின்ற இந்த படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார், பிரவீன் போன்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இளம் தொழிலதிபரான அமலாபால் அடர்ந்த காட்டுக்குள் சென்று வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றார். காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அமலாபால் என்னென்ன இன்னல்களை அனுபவிக்கிறார்.

வனப்பகுதிக்குள் இருக்கும் மிருகங்கள், காட்டுவாசிகளிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை மையப்படுத்தி திரில்லர் கதையாக திரைக்கதையை உருவாக்கி இருக்கின்றார் இயக்குனர் கே ஆர் வினோத். பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கின்ற இந்த திரைப்படம் சில காரணங்களால் வெளிவராமல் இருந்தது. இந்த நிலையில் அதோ அந்த பறவை போல திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இது தொடர்பாக ரிலீஸ் தேடியுடன் கூடிய புதிய போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *