பிரபல ரேடியோ ஜாக்கி, நடிகர் ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் புதிய படம் ‘சொர்கவாசல்’ நவம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக், ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ள இந்த படம், ஒரு ஜெயிலின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆர்.ஜே. பாலாஜி மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருகிறார். அவருடன் கருணாஸ், செல்வராகவன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும், சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசர் படத்தின் கதைக்களத்தை வித்தியாசமான முறையில் கொண்டு வந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. நவம்பர் 29 அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் சொர்கவாசல், சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.