மோலர்பந்த் கிராமத்தில் கிருஷ்ண காந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாய் கீதா, தந்தை சுஜித் சிங் மற்றும் தம்பி சாஹில் போலியுடன் வசித்து வந்தார். சாஹில் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். மூத்த மகன் கிருஷ்ண காந்த் வேலையில்லாமல் போதைக்கு அடிமையானார். கடந்த ஆறாம் தேதி மாலை கிருஷ்ணா வேலைக்காக கனடா சென்று குடியேற உள்ளதாக தனது தாயிடம் கூறியுள்ளார். அப்போது கீதா முதலில் திருமணம் செய்து கொள் பின்னர் வெளிநாடு செல்லலாம் என கூறியுள்ளார்.

இதனால் தாய் மகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபத்தில் கிருஷ்ண காந்த் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது கீதாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் அவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அதன் பிறகு கிருஷ்ண காந்த் தனது தந்தை சுஜித்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உடனே வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த உடன் என்னை மன்னித்து விடுங்கள் முதல் தளத்திற்கு சென்று நீங்களே பாருங்கள் என சொல்லிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

மகன் கூறியதை கேட்டு முதல் தளத்திற்கு சென்ற சுஜித் தனது மனைவி ரத்த வெள்ளத்தில் கடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கீதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.