கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹோஸ்கோட் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் 12 ஆம் வகுப்பு படிக்கிறார். இந்த சிறுமிக்கும் சேத்தன் குமார் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. குமார் அடிக்கடி சிறுமியிடம் ஆசையாக பேசி அவரை தனியாக அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். ஒரு கட்டத்தில் குமாரின் செயல்பாடுகள் எல்லை மீறி சென்றது.

இதனால் அச்சத்தில் சிறுமி தனக்கு நடந்த சம்பவத்தை தனது தந்தையிடம் கூறி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் குமரை கைது செய்தனர்.