அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு திரைப்படங்கள் நேற்று முன்தினம் வெளியாகி வசூல் ரீதியாக சக்கைபோடு போட்டு வருகிறது. இரண்டு படங்களுக்கும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.  வாரிசு, துணிவு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில்  சேலம் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் “துணிவு” படம் பார்க்க வந்த, பிரதீப் என்ற அஜித் ரசிகர், அங்குள்ள கேட்டின் மீது ஏறி நின்றுள்ளார். அப்போது அவர் கால் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார்.

இதனால் அவரை நண்பர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அஜித் அஜித் என்று கத்திக் கொண்டிருந்துள்ளார். உடனே அவரிடம் மருத்துவர்கள் உனக்கு அஜித் முக்கியமா? அப்பா, அம்மா முக்கியமா? என்ற போது எனக்கு அஜித்தான் முக்கியம் என்று கூறினார். ‘நடிகர் அஜித், முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள்… பிறகு தான் மற்றவை எல்லாம் என்று சொல்லியிருக்கும் போதும், ரசிகர்களின் இது போன்ற செயல் அஜித் பெயருக்கே களங்கம் ஏற்படுத்தும்’.