இந்தியாவின் முக்கியமான பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் மூன்றாவது காலாண்டு லாபம் மட்டும் 8,334.2 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மூன்றாம் காலாண்டில் இது வெறும் 235 கோடியாக இருந்தது. ப்ரிமியம் தொகையாக மட்டும் 1.12 லட்சம் கோடி ரூபாய் கிடைக்கப் பெற்றுள்ளதாக எல்ஐசி தெரிவித்துள்ளது. அதானி விவகாரத்தில் Lic மதிப்பு குறைந்து வரும் நேரத்தில் இந்த லாபம் பயனர்களை நிம்மதியடைய செய்துள்ளது.