தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது மாவட்ட வாரியாக களப்பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக கோவைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அங்கு 2 நாட்களாக பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்த நிலையில் நேற்று விருதுநகர் மாவட்டத்திற்கு சென்றார். அப்போது அங்குள்ள அன்னை சத்யா ஆதரவற்றோர் இல்லத்திற்கு முதல்வர் சென்றார்.
அப்போது அங்குள்ள ஆதரவற்றோர் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுடன் முதல்வர் உரையாடினார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் ஸ்வீட் பாக்ஸ்களை கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட தயார் ஆனார். அப்போது அங்குள்ள குழந்தைகள் Bye அப்பா என்று கூறினார்கள். இதை கேட்டது முதல்வர் ஸ்டாலின் கண்கலங்கி நின்றார். மேலும் இந்த வீடியோவை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின் அப்பா, நிறைவான நாள் என்று பதிவிட்டுள்ளார்.
“அப்பா…”
♥️நிறைவான நாள்♥️ pic.twitter.com/XQN9xt387Q
— M.K.Stalin (@mkstalin) November 9, 2024