அப்பளம் போல் நொறுங்கிய வேன்…. துடிதுடித்து உயிரிழந்த 6 பேர்….. பெரும் பரபரப்பு….!!!!!!

வேன் மீது லாரி மோதிய  விபத்தில் 6  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள  மதுராந்தகத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் இன்று காலை 15-க்கும் மேற்பட்டவர்களுடன் வேன் ஒன்று வந்துள்ளது. அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதியுள்ளது. இதனையடுத்து பின்னால் வந்த  வாகனம் வேனின்  மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் வேன் அப்பளம் போல் நெருங்கியது.

மேலும் வேனில் பயணித்த சந்திரசேகர், தாமோதரன், சசிகுமார், சேகர், ஏழுமலை, கோகுல் ஆகிய 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5  பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த 6  பேரின் சடலத்தையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.