அப்பப்பா வருது புதுசு புதுசா அப்டேட்…! இப்போதும் வந்திருக்கு வாட்ஸ் அப்பில் புதிய அம்சம்…!!

உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் பயனர்களுடைய வசதிக்காக whatsapp பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் whatsapp பயன்படுத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில் வாட்ஸ்அப் மற்றொரு புதிய அம்சத்தை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தின் படி. இனி நமது ஃபோன் நம்பரை மற்றவர்கள் பார்க்க இயலாது.

நாம் யாருக்காவது மெசேஜ் செய்தால், நம் ஃபோன் நம்பருக்கு பதிலாக  அவர்கள் நம் பயனருடைய பெயரை மட்டுமே பார்க்க முடியும். இதற்கு முதலில் நீங்கள் ஒரு தனிப்பட்ட பயனரின் பெயரை உருவாக்க வேண்டும். இந்த அம்சம் தற்போது ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.11.15 பதிப்பில் கிடைக்கிறது என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply