தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் மகளிர்க்கு மாதந்தோறும் ரூ.1000 கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பணம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஏராளமான பெண்கள் பயன்பெற்று வரும் நிலையில் புதியவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்திருந்தது. இந்த திட்டத்தில் பொருளாதார தளர்வுகளை தகர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் வகையில் அரசாங்கம் அது தொடர்பாக பரிசீலனை செய்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. முன்னதாக அரசு வேலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களின் மனைவியும் இனி மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தற்போது ஒரு முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தாகத் திட்டத்தின் கீழ் பணம் பெற முடியவில்லை என்று வருந்துகிறார்கள். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் விரைவில் மகளிர் உரிமை தொகையில் விடுபட்ட பெண்களுக்கும் பணம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.