
ஐசிசியின் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சிறந்த விருதை இந்திய வீரர் பும்ரா பெற்றுள்ளார். இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 13.06 சராசரியுடன் 32 விக்கெட்கள் வீழ்த்தினார்.
பும்ரா தனி ஒருவராக இந்திய அணியின் பந்து வீச்சு தாக்குதலை மேற்கொண்டார். இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் குறைந்த பந்துவீச்சு சராசரியில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மேலும் இதன் காரணமாக 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருது பும்ராவுக்கு கிடைத்துள்ளது.