நாட்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் மூலம் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்க ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு அவர்கள் ஓய்வு பெறும் காலத்தில் அவர்களுக்கு அது ஓய்வூதியமாக PF பணம் வழங்கப்படுகிறது. அதாவது தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யும் அதே தொகையை நிறுவனங்களும் வழங்கும். இதற்கு மத்திய அரசு குறிப்பிட்ட வட்டி வழங்குகிறது. இது வேலையில் இருந்து ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவுகிறது. தற்போது உள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி நிறுவனங்கள் அளிக்கும் பங்கீட்டில் பெரிய தொகை பிடித்தம் செய்யப்படும் நிலையில் வீடு கட்டவதற்கு மற்றும் அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டால் ஆன்லைனில் பதிவு செய்து இபிஎஃப்ஓ அக்கவுண்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
இந்நிலையில் தற்போது இபிஎஃப்ஓ பணத்தை ஏடிஎம் மூலம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த இருப்பதாக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இனி பணத்திற்கு உரிமை கோரும் போது அதிகப்படியான தலையீடு இல்லாமல் சுலபமாக ஏடிஎம் மூலம் எடுத்துக்கொள்ளலாம். இந்த புதிய வசதி அடுத்த வருடம் முதல் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. ஆனால் இந்த முறையில் மொத்த பணத்தில் 50% மட்டும்தான் எடுக்க முடியும். மேலும் வேலையில் இருந்து நின்ற பிறகும் மீதமுள்ள பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.