புதிதாக திருமணம் முடிந்தவர்கள் திருமணத்திற்கு பிறகு கொண்டாடும் முதல் பொங்கலை தல பொங்கல் என்று சிறப்பாக கொண்டாடுவார்கள். அப்படி புதுச்சேரி மாநிலம் ஏனாம் பகுதியை சேர்ந்த சத்யபாஸ்கருக்கு நாளை கொண்டாடப்பட இருக்கும் பொங்கல் தல பொங்கலாகும்.

இந்த தல பொங்கலை முன்னிட்டு சத்யபாஸ்கருக்கு மனைவியின் வீட்டார் பிரம்மாண்டமாக விருந்து வைத்துள்ளனர். அந்த விருந்தில் மொத்தம் 470 வகையான உணவுகள் பரிமாறப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.