அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து  பேசியதாவது “உலகமக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டி மீனாட்சி அம்மனை வேண்டினேன். அதிமுகவுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. வரும் 2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு விரைவில் மாபெரும் மாநாடு நடத்துவது பற்றி ஆலோசிக்க இருக்கிறோம்.

இதுவரை மாதம் ரூபாய்.1000 வழங்கியிருந்தாலும், சிலிண்டர் மானியம் ரூபாய்.100 என கணக்கிட்டால் இதுவரை ஒவ்வொரு மகளிருக்கும் திமுக அரசு ரூபாய் 22,000 கொடுத்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார். மேலும் நாங்கள் விரைவில் ஆட்சிக்கு வர வேண்டும் என மக்கள் எதிர்நோக்குகின்றனர். இதற்கிடையில் தி.மு.க. அரசு பல வரி, விலைவாசி அதிகரிப்புக்கு பின் அறிவித்த பொங்கல் பரிசு யானைப் பசிக்கு சோளப் பொறி என்பது போல தான் இருக்கிறது” என்று அவர் கூறினார்.