வேலுநாச்சியார் அவர்கள் நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக மரியாதை செலுத்தபட்டது. பின்னர் செய்தியாளர்கள்களிடம் பேசிய சீமான், உள்ளாட்சித் தேர்தலில் தமிழக மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த சீமான், இது எல்லாம் பைத்தியக்காரத்தனமான கேள்வி. 12 விழுக்காடு எங்களுக்கு வாக்கு செலுத்தியுள்ளார்கள். உள்ளாட்சி தேர்தலில் 100 க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களை வென்றுள்ளோம். எளிய மக்கள் எங்களுக்கு வாக்கு செலுத்தியுள்ளார்கள்.
நடந்த தேர்தலில் அதிக விழுக்காடு வாக்கு பெற்றது உள்ளாட்சி தேர்தலில் தான். இதனால் மக்கள் குறை சொல்லாதீர்கள். என்னை அங்கீகரிக்க வேண்டாம். எனக்கு என் தலைவர் இருக்கிறாரா ? இல்லையா அப்படி என்று கேட்பார்கள் ? இருக்காரு என்பது எனக்கு பலத்தை கொடுக்கின்றது அவ்வளவுதான். நான் இந்த வேலையைச் செய்ததில் மனநிறைவை அடைகின்றேன்.
என்னை அங்கீகரி, அங்கீகரிக்காமல் போ, என்னை வெல்ல வை, தோற்கடி. அதைப்பத்தி எனக்கு என்ன கவலை ? ஆனால் உழைத்தேன் என்பதோடு நான் வேலை செய்கின்றேன். மக்களை நேசித்து, சந்தித்த அந்த நிறைய இருக்கின்றது. என்னுடைய மரணம் எனக்கு வலிக்காது. நான் நிம்மதியாக மரணிப்பேன். நான் பிறந்த பயனை, கடனை செய்து விட்டேன், அவளவு தான். என்னை அங்கீகரிக்கிறார்கள், அங்கீகரிக்கவில்லை என மக்களைக் குறை சொல்லக் கூடாது என தெரிவித்தார்.