ஜெர்மனியில் இருக்கும் மியூசியத்தில் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கப்பட்ட கேன்வாஸ் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அதில் வேறு ஒன்றும் வரையப்படவில்லை. அதனை அமெரிக்காவை சேர்ந்த மறைந்த ஓவியர் ராபர்ட் ரேமன் என்பவர் வரைந்துள்ளார்.

வெற்று ஓவியமாக இருந்தாலும் அதில் ஆழ்ந்த அர்த்தங்கள் இருப்பதாகவும், ஒளி, அசைவு ஆகியவற்றை பிரதிபலிப்பதாகவும் மற்றொரு ஓவியக் கலைஞர் தெரிவித்துள்ளார். அந்த வெள்ளை நிற பெயிண்டிங் ஏலத்திற்கு வர உள்ளது. அந்த கேன்வாஸ் ரூ.9 கோடிக்கு ஏலம் போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.