
ரோஹித் சர்மா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, இளம் ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்து ரோஹித் சர்மாவை கட்டிப்பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது..
நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் போது மைதானத்திற்குள் நுழைந்த ரோஹித் சர்மாவை இளம் ரசிகர் ஒருவர் கட்டிப்பிடித்தார். இந்த சம்பவத்தால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரில் இந்திய அணி பரபரப்பு வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்தின் பேட்டிங் அச்சுறுத்தல் உள்ள சூழலில் நேற்று சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூர் ஸ்டேடியத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து அணியின் முதல் 5 பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.தொடக்க ஆட்டக்காரர்களான ஃபின் ஆலன் ரன் ஏதும் எடுக்காமலும், டெவோன் கான்வே 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஹென்றி நிக்கோல்ஸ் 2 ரன்னிலும், டேரில் மிட்செல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். விக்கெட் இழப்பை தடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டாம் லாதம் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் இணைந்த கிளென் பிலிப்ஸ்-பிரேஸ்வெல் ஜோடி சிறிது நேரம் தாக்குப்பிடித்து ரன்களை குவித்தது. பிலிப்ஸ் 52 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். கடந்த போட்டியில் 140 ரன்களுக்கு மிரட்டிய பிரேஸ்வெல் 22 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த சான்ட்னர் 27 ரன்கள் எடுக்க, அவர்களின் பங்களிப்பால் அணி 100 ரன்களைக் கடந்தது. 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து நியூசிலாந்து அணி 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர்ஜியர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சிராஜ், தாகூர், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அதன்பிறகு 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, சுப்மான் கில் ஆகியோர் களம் இறங்கினார்கள். சுப்மன் கில் நிதானமாக விளையாட கேப்டன் ரோகித் சர்மா முன்னேறினார். 50 பந்துகளை எதிர்கொண்ட ரோஹித் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 51 ரன்களை எடுத்து ஷிப்லியின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார்.
The moment the kid met Rohit Sharma. 😍#INDVSNZODI #RohitSharma𓃵 #KIDPHENOMENON #HitMan pic.twitter.com/oel0a7by0T
— Ro⁴⁵Phile (@ro45phile) January 21, 2023
முன்னதாக, ரோஹித் சர்மா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, இளம் ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்து ரோஹித் சர்மாவை கட்டிப்பிடித்தார். ரோஹித் ஷர்மாவைக் கட்டிப்பிடித்தபோது குழந்தையின் முகத்தில் மகிழ்ச்சி பரவியது. பின் அவரை அங்கிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் அப்புறப்படுத்த முயன்றனர். பின்னர் அவர்களிடம் ரோஹித் அன்பாக, ‘அவன் சிறுவன், போகட்டும்’. ரசிகருக்கு எதிராக எதுவும் செய்ய வேண்டாம் என்று கூறினார். பின் அந்த இளம் ரசிகர் மைதானத்தை விட்டு வெளியேறினார். ரசிகர்களிடம் ரோஹித் சர்மா காட்டிய கருணை மனதைத் தொட்டது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.. ரோஹித் ஷர்மா செக்யூரிட்டியிடம் – “அவனை விடுங்கள், அவர் ஒரு குழந்தை” என்று கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது..
https://twitter.com/XeeshanQayyum/status/1616810689317707778
Rohit Sharma told the security – "let him go, he's a kid".
Great gesture by the captain! pic.twitter.com/7Gz6nDHsV3
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 21, 2023
Rohit Sharma asking the security guard not to do anything against the fan.
Nice gesture from Captain. pic.twitter.com/pLS9NE9D40
— Johns. (@CricCrazyJohns) January 21, 2023
The happiness on the kid's face while hugging Rohit Sharma was wholesome. pic.twitter.com/ePzhM7Lz01
— Mufaddal Vohra (@mufaddal_vohra) January 21, 2023