பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனை பெறக்கூடிய பயனர்களுக்கு இந்த வருடம் ஹோலிப்பண்டிகையில் 2 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனர்களுக்கு மட்டும் பொருந்தும். தற்போது இலவச கேஸ் சிலிண்டர் யாருக்கு கிடைக்கும்? அதற்கான தகுதி என்ன?.. என்பது குறித்து நாம் தெரிந்துகொள்வோம்.

# உத்தரபிரதேசம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவராக இருத்தல் வேண்டும்.

# பெண்கள் மட்டுமே இலவச சிலிண்டர்கள் பெற தகுதி உடையவர்கள் ஆவர்.

# இச்சலுகைகளை பெற குறைந்தபட்ச வயது 21 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

# அதன்பின் பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் நடுத்தரவர்க்க பெண்களுக்கு வழங்கப்படும்.

# பிபிஎல் ரேஷன் கார்டு மற்றும் பிஎம் ரேஷன் கார்டு வைத்துள்ள பெண்கள் வாங்கலாம்.