இதுவரை ஆப்பிள் ஐபோன் 11 ஒரு பிரீமியம் மலிவு ஸ்மார்ட்போனாக இருக்கிறது. இது வருடாந்திர பிளிப்கார்டு பிக் பில்லியன் டேஸ் விற்பனை மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனையின்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் ஒரு உயர் நிலை ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால் உங்களுக்கு ஆப்பிள் ஐபோன் 11 ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். உங்களது பட்ஜெட் மிக கம்மியாக இருந்தாலும் அதை பற்றி கவலைப்படவேண்டாம்.

ஏனெனில் யாரும் நம்ப முடியாத விலையில் ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்டில் இந்த போனை வாங்கலாம். ரூ.36,250 தள்ளுபடிக்கு அடுத்து இந்த ஐபோன் பிளிப்கார்டில் ரூ.2,749-க்கு கிடைக்கும். ஆப்பிள் ஐபோன் 11, ரூ.4,901 விலைக் குறைப்புக்கு பின் பிளிப்கார்ட்டில் ரூ.38,999-க்கு விற்கப்படுகிறது. அதோடு வாடிக்கையாளர்கள் HDFC வங்கி கிரெடிட்கார்டு கொண்டு EMI பரிவர்த்தனைகளை செய்தால், பிளாட் ரூ.1,250 தள்ளுபடியையும் பெறலாம். இது இந்த ஸ்மார்ட் போனின் விலையை ஒட்டு மொத்தமாக ரூ.37,749 ஆக குறைக்கிறது. மேலும் பிளிப்கார்ட்டின் இந்த சேலில் ஒரு பரிமாற்ற சலுகை, அதாவது எக்ஸ்சேஞ் சலுகையும் இருக்கிறது.

வாடிக்கையாளர்கள் தங்களது பழைய போனை மாற்றிக்கொண்டால், இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகை வாயிலாக ரூ.35,000 வரை தள்ளுபடி பெறலாம். இருப்பினும் இந்த சலுகையை பெற தங்களது பழைய போன் நல்ல நிலையில் இருப்பதை வாடிக்கையாளர்கள் உறுதிசெய்ய வேண்டும். எனவே மொத்தம் ரூ.36,250 குறைப்புக்கு பின் வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஐபோன் 11-ஐ பிளிப்கார்டில் வெறும் ரூ.2,749 -க்கு வாங்கிக்கொள்ளலாம்.