அன்று குருவுக்கு…. இன்று அவர் மாணவருக்கு… ரஜினிக்கு நடிகர் விவேக் வாழ்த்து…!!!

நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது மத்திய அரசால் வழங்கப்பட்டது. இதையடுத்து ரஜினிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த விருது கிடைத்ததற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

மேலும் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பிஅரசியல் ரபலங்களும் நடிகர் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விவேக் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், அன்பு ரஜினி சார். என் இதயபூர்வ வாழ்த்துக்கள், கொடையானுகோடி ரசிகர்களில் ஒருவனாக இந்திய சினிமாவின் மிக உயர்ந்த விருதான தாதா சாஹேப் பால்கே பெற்றமைக்கு! அன்று குருவுக்கு! இன்று அவர் மாணவருக்கு! என் வாழ்த்துக்கள் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.