அன்பு ஒன்றே மாறாதது!…. நாய்க்குட்டியை தன் பிள்ளைபோல் வளர்க்கும் குரங்கு…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி பொன்னை பகுதியில் ஒரு குரங்கு, ஆதரவற்ற நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வருகிறது. இந்த குரங்குக்கு பிறந்த குட்டிகள் இறந்துவிட்டது. இதன் காரணமாக சாலையில் ஆதரவற்று சுற்றித்திரிந்த ஒரு நாய்குட்டியை அக்குரங்கு தன் குட்டியாகவே பாவித்து எடுத்து வளர்க்க தொடங்கி உள்ளது. மேலும் நாய்க்குட்டிக்கு பாலூட்டி குரங்கை போல் வயிற்றில் வைத்துக்கொண்டு யாரும் அதனை நெருங்காதபடி பாதுகாத்து வருகிறது.

அதேபோன்று அந்த நாய்க்குட்டியும் குரங்கிடமே பால் குடித்து பாசத்தோடு வளர்ந்துவருகிறது. மேலும் இந்த குரங்கு அங்குள்ள பொதுமக்களிடம் அன்பாக பழகி வருகிறது. இவ்வாறு குரங்கு மற்றும் நாய்க்குட்டியின் அளவில்லா பாசபிணைப்பானது காண்போரை நெகிழ்ச்சியில் உறையவைத்துள்ளது.