தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அன்புமணி எம்பி பதவி பெற்றது தொடர்பாக இபிஎஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்து அவர்களிடம் பிச்சை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதாக அன்புமணி சொல்கிறார்.

அப்படி அவருக்கு(அன்புமணி) போட்ட பிச்சை தான் அந்த எம்பி பதவி. அந்தப் பதவியை வாங்கிக் கொண்டுதான் எங்களை அவர் விமர்சிக்கிறார் என இபிஎஸ் கூறினார். மேலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிமுக அரசு உத்தரவிட்டதாகவும் தெரிவித்தார்.