தூத்துக்குடி மாவட்டம் சேதுக்குவாய்த்தான் பகுதியில் அங்குசாமி பொன்மாடத்தி எனும் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஆளுக்கு ஒரு மகன் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 3-ம் தேதி படுத்த படுக்கையாய் கிடந்த பொன்மாடத்தி உடல் நலக்குறைவால் இறந்துள்ளார். ஆனால் இந்த தகவலை அங்குசாமியிடம் அவரது குடும்பத்தினர் கூறவில்லை.

இதைத்தொடர்ந்து பொன்மாடத்தியின் இறுதிச்சடங்கு கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. அப்போது அங்குசாமிக்கு பொன்மாடத்தி  இறந்த செய்தி தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இறுதிச்சடங்கில் பங்கேற்ற அங்குசாமிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.

அதன் பின் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  ஆனால் செல்லும் வழியிலேயே அங்குசாமி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.