அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் டோரதி ஸ்மித். இந்த மூதாட்டிக்கு 102 வயது ஆகிறது. தனது இளம் வயதிலேயே மூதாட்டி ஆசியா வட அமெரிக்கா தென் அமெரிக்கா அண்டார்டிகா ஐரோப்பா ஆகிய கண்டங்களுக்கு சென்று வந்து விட்டார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு போனதில்லை. இதனால் அவரது ஆசை நிறைவேறாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் யெஸ் தியரி என்ற பிரபலமான யூடியூப் சேனல் நடத்தி வரும் அம்மார் காண்டில் மற்றும் ஸ்தாபன் டெய்லர் ஆகியோருக்கு மூதாட்டி ஆசை பற்றி தெரியவந்தது.

அவர்கள் மூதாட்டியை அழைத்துச் சென்று ஆஸ்திரேலியாவை சுற்றி காட்டினர். முதுமையிலும் சர்க்கரை நாற்காலியில் அமைந்தபடி அவர் ஆஸ்திரேலியாவை கண்டுகளித்தார். இது தொடர்பான போட்டோஸ் வீடியோஸ் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. மூதாட்டியின் கனவை நிறைவேற்றிய வாலிபர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.