அன்னிய வர்த்தகத்தில் அசத்திய சீனா … அமெரிக்காவுக்கு மோசமான பதிலடி ..!!

சீனாவின் அன்னிய செலாவணி மதிப்பு அதிகரித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவுக்கு அமெரிக்காவுடன் வர்த்தக போர் நீடித்து வருகிறது. இதனால் சீனாவின் அன்னிய செலவாணி கையிருப்பு குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்புக்கு  மாறாக ஆகஸ்ட் மாதத்தில் 350 கோடி டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதுகுறித்து சீனாவின் மத்திய வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி அன்னிய செலவாணி கையிருப்பு ஆகஸ்ட் மாதத்தில் 3.1072 லட்சம் கோடி டாலராக அதிகரித்துள்ளது.

Related image

மேலும் சர்வதேச சந்தையில் நிலவிய ஏற்ற இறக்கத்தால்  சீனாவின் அன்னிய செலவாணி கையிருப்பு ஆகஸ்ட் மாதத்தில் 400 கோடி டாலர் அளவுக்கு சரி வடையும் என பொருளாதார நிபுணர்கள் கூறினர். ஆனால், அவர்கள் கூறியதற்கு மாறாகவும் உயர்வடைந்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு சீனாவின் அன்னிய செலவாணி சரிவடைந்திருந்த நிலையில் சீனாவின் பங்குச் சந்தை மற்றும் பத்திரங்களில் செய்யப்பட்ட அந்நிய முதலீடுகள் தற்போது அந்நிய செலாவணி உயர்ந்துள்ளது.

Image result for யுவான் நாணய மதிப்பை சீனா

இந்நிலையில் , கையிருப்பில் வைத்திருக்கும் தங்கத்தின் மதிப்பு ஆகஸ்ட் மாதத்தில் 9 ஆயிரத்து 545 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இதனால் சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது. ஆகையால், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க டாலருக்கு நிகரான யுவானின் நாணய மதிப்பை சீனா குறைத்ததுள்ளது. இதுமட்டுமின்றி  கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.8 சதவீதம் அளவுக்கு சீன நாணயத்தின் மதிப்பு குறைக்கப்பட்டுள்ளது.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *