அனைத்து வலிகளுக்கும் சிறந்த நிவாரணி… தினமும் வெற்றிலை, இஞ்சி சாறு குடிங்க..!!!

அனைத்து வலிகளிலும் சிறந்த நிவாரணியாக அமையும் வெற்றிலையை தினமும் சாப்பிடலாம்.

தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.

இந்நிலையில் வெற்றிலைச் சாறு 5 மிலி, இஞ்சிச்சாறு 5 மிலி, கலந்து தினமும் காலை குடித்து வந்தால், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. வெற்றிலை அனைத்து விதமான வழிகளுக்கும் நிவாரணியாகும். வெட்டுக்கள், சிராய்ப்புகள் மற்றும் வீக்கம் என வெளிப்புற காயங்களுக்கு வெற்றிலையை அரைத்து பசையாக்கி காயங்களின் மேல் தடவலாம். உட்புற வலிகளுக்கும் மென்றோ அல்லது சாறு குடிக்கலாம்.