தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வரும் நிலையில் தற்போது ரேஷன் கடைகளில் பொருட்கள் விற்பனையின் போது வழங்கப்படும் ரசீதில் ஒவ்வொரு பொருளுக்கும் தமிழக அரசு மானியமாக எவ்வளவு தொகையை செலவிடுகிறது என்ற விவரத்தை உணவுத்துறை வெளியிடுகிறது.

சிலர்  ரேஷன் பொருள்களின் மதிப்பு தெரியாமல் கடை ஊழியர்களை எடுத்துக் கொள்ளுமாறு கூறுவதால் தான் பலமுறை கேடு நடக்கிறது. இதனால் பொருட்களை விற்கும்போது ரசீதில் பொருட்களின் தொகை உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றன.