அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி உறுதி… எல்.முருகன்….!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என பாஜக தமிழக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகளில் நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் இரவு 7 வரை வாக்குப்பதிவு நடந்தது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கொரோனா பாதுகாப்பு விதி முறைகளை கடைபிடித்து மக்கள் அனைவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதில் சில வாக்குச்சாவடிகளில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்கு தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு வாக்கு இயந்திர கோளாறுகள் சரி செய்யப்பட்டு, மக்கள் அனைவரும் வாக்களித்தனர். அதிலும் சில கட்சிகள் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி கலவரம் செய்தனர்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் 72.78% வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் 87.33% வாக்குகள், குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தாராபுரத்திலும் தனது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது என்று பாஜக தமிழக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார். அதிமுக அரசு முதல்வர் பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறியதுடன், ஆட்சியில் பங்கேற்பது பற்றி எங்கள் கட்சித் தலைமைதான் முடிவு எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அப்படி என்றால் கூட்டணி ஆட்சி என்பது முடிவாகி விட்டதா? என்ற மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *