அனுமதி இல்லாமல் செயல்பட்ட இரண்டு பார்கள்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரம் வடக்கு தெரு மற்றும் ஸ்பிக் நகரில் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த மதுபான கடைகளுக்கு அருகே உள்ள இரண்டு பார்கள் அரசு அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்து வந்தது.

இந்நிலையில் அரசு அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் அந்த இரண்டு பார்களையும் தாசில்தார் பிரபாகரன் தலைமையில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சத்யராஜ், வருவாய்த்துறை ஆய்வாளர் சரவண வேல்ராஜ், முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர் ஆகியோர் நேற்று இரவு பூட்டி சீல் வைத்துள்ளனர்.

Leave a Reply