காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த செவ்வாய்க்கிழமை நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஜெயம் ரவி, நித்யா மேனன், ஏஆர் ரகுமான், அனிருத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய ஏஆர் ரகுமான், “அனிருத் திறமையானவர். அதனால் தான் பல இசையமைப்பாளர்கள் இருந்தும் தனது திறமையால் பெரிய படங்களில் இசையமைத்து வெற்றி பெறுகிறார்.
அனிருத்துக்கு எனது சிறிய அறிவுரை. அனிருத் கிளாசிக்கல் இசையை அதிகம் கற்றுக்கொண்டு அதனை பாடல்களில் பயன்படுத்த வேண்டும். இது அவரை நீண்ட காலம் இசை உலகில் பயணிக்க செய்யும். அவர் மூலமாக இளம் தலைமுறையினருக்கும் இசை சென்றடையும்” என்று கூறியுள்ளார்.