
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியாரை அநாகரிகமான முறையில் பேசினார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது, பெரியாரை மிகவும் அநாகரிகமான முறையில் நாம் தமிழர் கட்சி கொச்சைப்படுத்தியதை அதிமுக கண்டும் காணாமல் கடந்து சென்றது அதிர்ச்சி அளித்தது.
பாஜகவும் வரிந்து கட்டி கொண்டு இந்த வெறுப்பு அரசியலை வரவேற்றது. இந்த இரண்டு கட்சிகளின் போக்கு அவர்களுக்கு இடையே உள்ள மறைமுக உடன்பாட்டை உறுதிப்படுத்துகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.