நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள லியோ திரைப்படத்தின் போஸ்டர் ஆனது நேற்று வெளியானது. அதில் நான் ரெடி என்ற தலைப்பில் விஜய் வாயில் சிகரெட் பிடிப்பது போன்று இருந்தது. இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் நடிகர் விஜய் புகை பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தம் அளிக்கிறது. நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படங்களை குழந்தைகள் மாணவர்கள் என அனைவரும் பார்க்கிறார்கள்.

அவர்கள் புகை பிடிக்கும் காட்சியில் நடிப்பதை பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகி விடக்கூடாது. புகைப்பழக்கத்தில் இருந்து பொதுமக்களை காக்கும் சமூக பொறுப்பும் அவருக்கு உண்டுசட்டமும் அதைத்தான் சொல்கிறது எனவே நடிகர் விஜய் கடந்த 2007-2012 ஆம் ஆண்டுகளில் உறுதி அளித்தது போலவே திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை  அடிப்படையில் தவிர்க்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.